மின்கம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 வீடுகளின் இணைப்பு எரிந்து நாசம். வாணியம்பாடியில் பரபரப்பு

மின்கம்பத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் 50 வீடுகளின் இணைப்பு எரிந்து நாசம்

Update: 2021-08-30 18:06 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி ெரயில் நிலையம் அருகே உள்ள பட்டேல் தெருவில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அந்தத் தெருவில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென மின்கசிவால் வயர்கள் தீப்பற்றி எரிந்தன. தீ மளமளவென பரவி வீடுகளுக்கு இணைப்பு கொடுத்துள்ள வயர்களில் எரிந்து கொண்டே சென்றது. தீ விபத்தால் மின்கம்பி அறுந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பு எரிந்து நாசமானது. 

அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, மின்கம்பத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்