இளையான்குடி,
இளையான்குடி மல்லிப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் முகமது மன்சூர் (வயது66). இவர் சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மோதியதில் படுகாயம் அடைந்து இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் இளை யான்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டேசு வரன் விசாரணை நடத்தி ராமநாதபுரத்தை சேர்ந்த கார் டிரைவர் தினேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.