திருக்கோவிலூர் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு

திருக்கோவிலூர் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு தம்பியின் கண் எதிரே நிகழ்ந்த பரிதாபம்

Update: 2021-08-30 17:39 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கண்டாச்சிபுரம் பழவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் நாதன் மகன் பல்லவராயன்(வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் டி.பார்ம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்லவராயன் அவரது தம்பி முத்தமிழ் என்பவருடன் அதே பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தரை கிணற்றில் குளித்தார். அப்போது நீச்சல் தெரியாத பல்லவராயன் தண்ணீரில் மூழ்கினார். 

தன் கண் எதிரே அண்ணன் நீரில் மூழ்கியதை பார்த்த முத்தமிழ் கூச்சல் எழுப்பினார். இ்ந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் வேட்டவலம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி இறந்து போன பல்லவராயன் உடலை மீட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கண்டாச்சிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் பல்லவராயன் உடலை பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்