திருவெண்ணெய்நல்லூரில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணம் போலீஸ் விசாரணை

திருவெண்ணெய்நல்லூரில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தாா். இதுகுறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.;

Update: 2021-08-30 17:27 GMT
அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் மலட்டாறு கரையோர பகுதியில் வனப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள சுடுகாடு ஒரு மரத்தில், ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை அந்த பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றவர்கள் பார்த்து, திருவெண்ணெய்நல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

 அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். 

அதில், அவர் திருவெண்ணெய்நல்லூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த கோபால் மகன் கலைஞர் என்கிற பாவாடை (வயது 65) என்பதும்,  கூரை கொட்டகை அமைக்கும் தொழிலாளியான இவர், குடும்ப பிரச்சினை காரணமாக 5 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

 அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அவர் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு இருப்பது தெரிவந்ததது. 


 இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாவாடை தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்