தண்ணீர் வரத்து அதிகரிப்பால் சோளிங்கர் ஏரி நிரம்பியது

சோளிங்கர் ஏரி நிரம்பியது

Update: 2021-08-30 17:22 GMT
சோளிங்கர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் கடந்தசில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதிக மழைப் பொழிவால் அங்குள்ள கலவகுண்டா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அந்த அணையில் இருந்து தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அந்தத் தண்ணீர் பொன்னை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொன்னை அணைக்கட்டு நிரம்பி 2 நீர்ப்பாசன கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

கிழக்கு பகுதி கால்வாய் வழியாக செங்கல்நத்தம், ஏரிமின்னூர், ரெண்டாடி, சோளிங்கர், பெருங்காஞ்சி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது. அதேபோல் சோளிங்கர் ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியின் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் இன்னம் சில நாட்களில் கடைவாசல் செல்ல உள்ளதாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீசிய நிவர் புயலின்போது பெய்த கனமழையால் சோளிங்கர் ஏரி நிரம்பியது. தற்போது மீண்டும் சோளிங்கர் ஏரி நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது. சோளிங்கர் ஏரி நிரம்பி கடைவாசல் செல்ல உள்ளதால் விவாசாயிகளும், ‌பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்