மோட்டார்சைக்கிள்களை திருடியவர் கைது

மோட்டார்சைக்கிள்களை திருடியவர் கைது

Update: 2021-08-30 16:22 GMT
நல்லூர்
திருப்பூர் மாநகர் நல்லூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுக்காட்டில் உள்ள வீதியில் பனியன் நிறுவனங்கள் முன்பு வெளியில் நிறுத்தப்பட்டிருக்கும் அனைத்து இருசக்கர வாகனத்தை ஒருவர் சைடு லாக் போடப்பட்டுள்ளதா என நோட்டமிட்டு செல்வதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் வசித்து வரும் கந்தசாமி மகன் ஆனந்தராஜ் (வயது 34), இவர் திருப்பூர் மாநகர பகுதிகளில்  தங்கும் இடங்களில் சாலையோரம் நிறுத்தி செல்லும் இருசக்கர வாகனத்தை சைடு லாக் செய்யாத மோட்டார்சைக்கிளை  தேர்வு செய்து திருடி வருவது தெரியவந்தது. அவரை கைது செய்த நல்லூர் போலீசார் அவரிடம் இருந்து 2 மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர

மேலும் செய்திகள்