உடுமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செம்மண் தளத்தில்டென்னிஸ் விளையாட்டுமைதானம்
உடுமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செம்மண் தளத்தில்டென்னிஸ் விளையாட்டுமைதானம்
உடுமலை
உடுமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் செம்மண் தளத்தில்டென்னிஸ் விளையாட்டுமைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவைத் தலைவர் ஆடிட்டர் எஸ்.கண்ணன்தலைமை தாங்கிபேசினார். கல்லூரியின் முன்னாள் மாணவர் பேரவைச் செயலாளர் ஆடிட்டர்ஆர்.கந்தசாமி முன்னிலை வகித்துபேசினார். டென்னிஸ் விளையாட்டு மைதானத்தை, கல்லூரியின் முதல்வர் எஸ்.கே.கல்யாணி திறந்து வைத்தார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் மனோகர் செந்தூர்பாண்டிவரவேற்றுப் பேசினார்.விழாவில் பேராசிரியர்கள் சிவக்குமார், ராமலிங்கம், வாசுதேவன், மலர்வண்ணன், கார்த்திகேயன், வேலுமணி, விஜயகுமார், ஜாபர் சாதிக் அலி மற்றும்முன்னாள் மாணவர் பேரவை உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள்நடப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் விளையாட்டுத்துறையினர் செய்திருந்தனர்.