செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா சி்க்கியது

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீசார் ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து செங்கல்பட்டு ரெயில் நிலையம் வந்த விரைவு ரெயிலை சோதனை செய்தனர். அப்போது 4 பைகள் இருந்தன. பைகளை திறந்து பார்த்தபோது அந்த பைகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2021-08-30 11:37 GMT
இதனை தொடர்ந்து செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்புபடை அலுவலகத்தில் கொண்டு சென்று சோதனையில் ஈடுபட்டபோது ரூ.5 லட்சம் மதிப்பிலான 30 கிலோ எடை கொண்ட கஞ்சா என்பது தெரியவந்தது ரெயிலில் கடத்தி வந்த மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் கஞ்சாவை ரெயிலில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டனர். கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எங்கிருந்து எடுத்து வந்து யாருக்கு விற்பனை செய்கிறார்கள்? என தெரியவில்லை. கஞ்சாவை காஞ்சீபுரம் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்