வெள்ளவேடு பகுதியில் வாகனம் மோதி முதியவர் சாவு

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு பகுதியில் நேற்று முன்தினம் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

Update: 2021-08-30 10:58 GMT
இதில் பலத்த காயம் அடைந்த முதியவர் உயிருக்கு போராடினார். இதை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக பூந்தமல்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இறந்து போன முதியவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து வெள்ளவேடு கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாத் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்