ஈரோட்டில் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது

ஈரோட்டில் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.

Update: 2021-08-29 22:45 GMT
ஈரோடு
ஈரோட்டில் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.
கொரோனா பரவல்
ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம் ஆகிய இடங்களில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றன. மேலும், சம்பத்நகர் நசியனூர் ரோடு, வீரப்பன்சத்திரம் சத்தி ரோடு உள்ளிட்ட இடங்களில் தனித்தனி கடைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக திரண்டதால், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டன.
வாரத்தின் இறுதி நாட்களில் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை உருவானது. இதையடுத்து கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் மீன் மார்க்கெட் செயல்பட மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
எச்சரிக்கை
இந்த நிலையில் கொரோனா தொற்று மெதுவாக குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஸ்டோனி பாலம் மீன் மார்க்கெட் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மார்க்கெட் திறக்கப்பட்டு வியாபாரிகள் கடைகள் அமைத்து இருந்தனர். பொதுமக்கள் ஒவ்வொருவராக சென்று மீன்களை வாங்கி சென்றார்கள்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். அப்போது பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினார்கள். இதேபோல் சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு வழிமுறையை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்