ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைந்தால் கைதாகிவிடுவார்-மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி

ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைந்தால் கைதாகி விடுவார் என்று மதுரை ஆதீனம் பரபரப்பு பேட்டி அளித்து உள்ளார்.

Update: 2021-08-29 21:34 GMT
மதுரை,

மதுரை ஆதீன மடத்தின் 293-வது ஆதீனமான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரி ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- நான் மக்களோடு மக்களாக எப்போதும் தொடர்பில் இருப்பேன். அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு என்ற போராட்டத்திற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடை பயணம் மேற்கொண்டவன் நான். எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புடையவன் நான். நித்யானந்தா ஒரு பொருட்டே இல்லை. அவர் இங்கு வந்தால் கைதாகிவிடுவார். சமூக நல்லிணக்க மாநாடுகளுக்கு அழைத்தால் செல்வேன். நான் குரானையும், பைபிளையும் ஏற்றுகொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்