அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தது.
அன்னதானப்பட்டி:
சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மதுரை வீரன் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் ஜோதிமுருகன் (வயது 25), முதுகலை பட்டதாரி. அயோத்தியாப்பட்டணம் ராம் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ஜெயசித்ரா (21). பி.எட். பட்டதாரியான இவரும், ஜோதிமுருகனும் ஒரு கோவில் திருவிழாவில் சந்தித்து பழகி உள்ளனர். பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில், காதல் ஜோடி ஜோதிமுருகன்-ஜெயசித்ரா நேற்று பாதுகாப்பு கேட்டு சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து தஞ்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரின் பெற்றோர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி காதல் தம்பதியை அனுப்பி வைத்தனர்.