வாலிபரை அரிவாளால் வெட்டியவர் கைது

மானூர் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-29 19:57 GMT
மானூர்:
மானூர் அருகே கானார்பட்டியைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவருடைய மகன் வினோத் ராஜ் (வயது 33). இவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனை அந்த பெண்ணின் உறவினரான ஜான் துரை (41) கண்டித்தார்.
சம்பவத்தன்று வினோத் ராஜ் அங்குள்ள பள்ளிக்கூடம் முன்பாக சென்றபோது, அவரை வழிமறித்து ஜான் துரை அரிவாளால் வெட்டினார். இதில் இடது கையில் காயமடைந்த வினோத் ராஜ் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் துரையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்