திருக்குறள் கூறிக் கொண்டு திருவள்ளுவர் ஓவியம் வரைந்த மாணவி

நெல்லையில் திருக்குறள் கூறிக் கொண்டே திருவள்ளுவர் ஓவியத்தை மாணவி வரைந்தார்.

Update: 2021-08-29 19:46 GMT
நெல்லை:
திருவள்ளூரைச் சேர்ந்த செந்தில்குமார்-காந்தி தம்பதி மகள் 7-ம் வகுப்பு மாணவி லக்‌ஷனா. கொரோனா காலக்கட்டத்தில் பாளையங்கோட்டை தியாகராஜநகரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து பள்ளிப்படிப்பை ஆன்லைன் மூலம் படித்து வருகிறார். கொரோனா விடுமுறையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஓராண்டு காலமாக தொடர்ந்து ஓவிய பயிற்சி பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சிவராம் கலைக்கூட ஓவிய ஆசிரியர் கணேசன் மூலம் திருவள்ளுவர் படத்தை வரைவதற்கான முயற்சி மேற்கொண்டார்.
இதையடுத்து திருவள்ளுவரின் ஓவியம் வரையும் நிகழ்ச்சி அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை தாங்கினார். கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலை போல 13 அடி அகலத்தில், 30 அடி நீளத்தில் ஓவியமாக வரைந்தார். அப்போது, 1,330 திருக்குறளையும் கூறிக்கொண்டே திருவள்ளுவர் படத்தை வரைந்து சாதனை படைத்தார்.
நிகழ்ச்சியில் ஆசிரிய, ஆசிரியைகள், ஓவியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திருக்குறள் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்