திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவத்தில், திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-08-29 19:35 GMT
மதுரை,

மதுரையில் மேம்பாலம் இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவத்தில், திட்ட பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேம்பாலம்

மதுரை-நத்தம் இடையே நடந்து வரும் நான்கு வழிச்சாலை பணிகளில் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து ஊமச்சிக்குளம் வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பாலத்தை நகர் பகுதிகளில் இணைப்பதற்காக நாகனாகுளம் பகுதியில் இணைப்பு பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் பணிகளின் போது நேற்று முன் தினம் விபத்து ஏற்பட்டு ஆகாஷ் சிங் என்ற வாலிபர் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மத்திய அரசின் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறியாளர் அனில்குமார் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 3 பேர் மீது வழக்கு

முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் கட்டுமான நிறுவனத்தின் திட்ட பொறுப்பாளர் பிரதீப்குமார்ஜெயின், பொறியாளர் சந்தியேந்தர்வர்மா, ஹைட்ராலிக் எந்திரங்கள் ஒப்பந்த நிறுவனத்தை சேர்ந்த பாஸ்கர் ஆகிய 3 பேர் மீது தல்லாகுளம் போலீசார் அஜாக்கிரதையாக எந்திரங்களை கையாள்வது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையில் உடைந்து உள்ள பாலத்தின் பகுதிகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று முன் தினம் பணி தொடங்கினாலும், நேற்று வரை முடியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்