நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.;
நாமக்கல்:
கொரோனா
தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 48 ஆயிரத்து 677 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையே 2 பேரின் பெயர்கள் பிற மாவட்ட பட்டியலில் இருந்து நாமக்கல் மாவட்ட பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 679 ஆக உயர்ந்தது.
இந்தநிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 51 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது பரிசோதனையில் தெரியவந்தது. இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 48 ஆயிரத்து 730 ஆக உயர்ந்தது.
அதிகரித்த தொற்று
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 59 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 47 ஆயிரத்து 713 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 469 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 548 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 51 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.