கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி. கலெக்டர் தகவல்

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் அனுமதி

Update: 2021-08-29 17:36 GMT
வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வேலூர் மாவட்டத்தில் உள்ள 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்  நாளை மறுதினம் (புதன்கிழமை) முதல் சுழற்சி முறையில் இயங்க உள்ளன. அனைத்து கல்லூரிகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். கல்லூரிக்கு வரும் அனைத்து பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். மேலும் அதற்கான சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள். கல்லூரியில் முககவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகிய நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்தல் வேண்டும்.

இதுவரை தடுப்பூசி செலுத்தாத பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் தங்கள் வீட்டின் அருகே நடைபெறும் சிறப்பு முகாம் அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்