வடபொன்பரப்பி பகுதியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை
வடபொன்பரப்பி பகுதியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை ஒலிபெருக்கி மூலம் போலீசார் எச்சரிக்கை
மூங்கில்துறைப்பட்டு
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் மிக விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு பின்னர் அவற்றை நீர் நிலைகளில் கரைத்து விடுவார்கள். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலை வைத்து வழிபடுவதற்கு அரசால் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வருகிற 10-ந் தேதி வருகிறது. இந்த ஆண்டும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வடபொன்பரப்பி போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியான புதூர் கூட்டு சாலை, புதுப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டி, மேல் சிறுவள்ளூர், பிரம்ம குண்டம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயச்சந்திரன், வீரன், குர்ஷித் பாஷா மற்றும் போலீசார் ஆட்டோவில் ஒலி பெருகி மூலம் மேற்கண்ட இடங்களில் பொதுமக்களை எச்சரித்தனர்.