கிருஷ்ணகிரி அணை, சிறுவர் பூங்காவில் குவிந்த பொதுமக்கள்
கிருஷ்ணகிரி அணை மற்றும் சிறுவர் பூங்கா திறக்கப்பட்டதால் அங்கு பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் குவிந்தனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் அதிகம் கூடும் பொழுது போக்கு பூங்காக்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள், பெரிய வணிக வளாகங்கள், நீச்சல் குளம், படகு இல்லம், அணை பூங்காக்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி கடந்த 23-ந் தேதி முதல் சினிமா தியேட்டர்கள், அணை பூங்காக்களை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் குவிந்தனர்.
படகு இல்லம்
நீண்ட இடைவெளிக்கு பிறகு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால், அணை பூங்கா, சிறுவர் பூங்காக்களில் மகிழ்ச்சியாக பொழுதை போக்கினர். அதே போல் கிருஷ்ணகிரி அருகில் உள்ள அவதானப்பட்டி சிறுவர் பூங்கா மற்றும் படகு இல்லங்களில் பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் அங்கும், சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர்.