வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் பலி

Update: 2021-08-29 16:47 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (வயது 54). எலக்ட்ரீசியன். இவர் நேற்று தனது வீட்டில் பழுதடைந்து இருந்த மிக்சியை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் உடனடியாக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே இறந்துவிட்டார்.
இதுகுறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்