கோவையில் மழை

கோவையில் மழை

Update: 2021-08-29 16:36 GMT
கோவை

கோவை மாநகர் பகுதியில்  சில இடங்களில் லேசாக மழை தூறியது. மேலும் வானம் மேக மூட்டத்துடன் காணப் பட்டது. புறநகர் பகுதியில் பரவாலக மழை பெய்தது. 

கவுண்டம்பாளையத்தில் பெய்த மழை காரணமாக புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கீழ் சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர்.

கோவை கிராஸ்கட் சாலையில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அங்கு வாகன போக்குவரத்து பெரிய அளவில் இல்லாததால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

அதை தீயணைப்பு படையினர் அகற்றினார்கள். 

மேலும் செய்திகள்