விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை; அதிகாரிகளுக்கு காஞ்சீபுர கலெக்டர் உத்தரவு

விவசாயிகள் அளித்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2021-08-29 13:10 GMT
விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் கொண்ட மனுக்களை விவசாயிகளிடம் இருந்து மாவட்ட கலெக்டர் பெற்று கொண்டார். அந்த மனுக்களின் மீதான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சிறப்பு தடுப்பூசி முகாம்
அதனைதொடர்ந்து மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் மக்கள் நல்வாழ்வு துறை மூலமாக சிறப்பு தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது, இந்த முகாமில் கூட்ட அரங்கிற்கு வந்த விவசாயிகள் தங்கள் பெயர் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

பின்னர் கலெக்டர் ஆர்த்தி விவசாயிகளிடம் தெரிவித்ததாவது:-
விவசாயிகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி அவசியத்தையும் மற்றும் நலன்களையும் தெரிந்துகொண்டு அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கையேடுகள்
வேளாண்மை துறை சார்பாக உழவர்களின் நலன் பேணி காக்க உழவன் செயலியும் அதன் பயன்களும் மற்றும் நுண்ணீர் பாசனம் என 2 கையேடுகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட வேளாண்மை இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி பெற்றுக் கொண்டார்.தமிழக அரசின் மூலம் செயல்படுத்தி வரும் பல்வேறு வேளாண்மை துறை சார்ந்த திட்டங்களை தெரிந்து கொண்டு அதனை பெற்று பயனடையுமாறு விவசாயிகளை மாவட்ட கலெக்டர் கேட்டு கொண்டார்.இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், இணை இயக்குனர் கோல்டி பிரேமாவதி, கூட்டுறவு துறை இணைபதிவாளர் லட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கணேசன், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்