பஸ் நிலையத்தில் வலம் வரும் நாய்கள்
உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்குள் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் குழந்தைகள், பெண் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
உடுமலை
உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்குள் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவதால் குழந்தைகள், பெண் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
நாய்கள் தொல்லை
உடுமலையில் அனைத்து பகுதிகளிலும் நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அதுவும் இறைச்சிக்கடைகள் உள்ள பகுதிகளில், இறைச்சி கழிவுகளை தின்பதற்காக நாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. அதேபோன்று உடுமலை மத்திய பஸ்நிலையத்திற்குள்ளும் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சிலநேரங்களில் அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொண்டு அங்குமிங்கும் ஓடுகின்றன. அத்துடன் சில நேரங்களில் பஸ்நிலைய வளாகத்தில் நாய்கள் கூட்டமாக படுத்து ஓய்வெடுக்கின்றன.
பயணிகள், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு செல்லும்போது, தவறிநாய் மீது கால் வைத்துவிட்டால், நாய்கடித்து விடக்கூடிய சூழ்நிலைஉள்ளது. அதனால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
நடவடிக்கை
இதேபோன்ற நிலைதான் மற்ற பகுதிகளிலும் உள்ளது. அதனால் நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள எதிர்பார்க்கின்றனர்.
-