கொங்கணாபுரத்தில் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
கொங்கணாபுரத்தில் ரூ.60 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
எடப்பாடி:
எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரத்தில் இயங்கி வரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி, ஏலம் நடந்தது. இதற்கு சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருப்பூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர்.
ஏலத்தில் சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 800 முதல் ரூ.10 ஆயிரத்து 101 வரையிலும், பி.டி.ரக பருத்தி குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 650 முதல் ரூ.8 ஆயிரத்து 102 வரையிலும் விற்பனையானது. மொத்தமாக 2 ஆயிரத்து 200 பருத்தி மூட்டைகள் ரூ.60 லட்சத்துக்கு ஏலம் போனது.