சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-08-28 21:52 GMT
நெல்லை:
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் நெல்லை பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட பொது நலச்சங்க தலைவர் பால் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் பாரதி முருகன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆபிரகாம் டேனியல், அருணகிரி, முத்துப்பாண்டி, முகமது யாசின், குமார், இசக்கிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்