வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

சமயநல்லூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2021-08-28 20:09 GMT
வாடிப்பட்டி,

சமயநல்லூர் அருகே சிறுவாலை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மனைவி தாயம்மாள் (வயது 47). விவசாய கூலி தொழிலாளி. இந்த நிலையில் தாயம்மாள் நேற்றுமுன்தினம் காலை 6 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அதன்பின் அவரது மகன் 8 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மதியம் 2 மணிக்கு தாயம்மாள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து துணிமணிகள் சிதறி கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரொக்கப்பணம் ரூ.5ஆயிரம், வெண்கல குத்துவிளக்கு, செல்போன் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.37 ஆயிரத்து 300 ஆகும். இது குறித்து தாயம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்