ரெயிலில் அடிபட்டு மயில் சாவு
மைசூரில் இருந்து திண்டுக்கல் வழியாக தூத்துக்குடிக்கு சென்ற ரெயிலில் அடிபட்டு மயில் ஒன்று இறந்தது.
திண்டுக்கல்:
மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 6.25 மணி அளவில் திண்டுக்கல் அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது இரைதேடி தண்டவாள பகுதிக்கு வந்த ஆண் மயில் ஒன்று ரெயிலில் அடிபட்டு என்ஜினில் சிக்கி இறந்தது.
இதற்கிடையே ரெயில் திண்டுக்கல்லுக்கு வந்தடைந்தது. பின்னர் ரெயில் என்ஜினில் சிக்கியிருந்த ஆண் மயிலின் உடலை ரெயில்வே போலீசார் மீட்டு வனத்துறை அதிகாரி முகமது தாஜ்தீனிடம் ஒப்படைத்தனர்.