விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அர்ச்சுணன்(வயது 60). ெதாழிலாளி. இவரது மனைவி மணிமேகலை(50). இவர்களுக்கு கார்த்திக் என்ற மகன் உள்ளார். அர்ச்சுணன் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அவரது சொத்துக்களை விற்றுவிட்டு அவரது மனைவி ஊரான சுண்டக்குடி கிராமத்தில் உள்ள மாமனார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனால் கடந்த சில நாட்களாகவே மன வருத்தத்தில் இருந்த அவர் அவ்வப்போது மது குடித்து விட்டு புலம்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவரது மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில் குடிபோதையில் இருந்த அர்ச்சுணன் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை(விஷம்) குடித்துள்ளார். இதனால் வாந்தி எடுத்த அவரை, குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.