தொழிலாளி கொலை வழக்கில்பீகாரை சேர்ந்த அண்ணன்-தம்பி கைது

மணப்பாறை அருகே தொழிலாளி கொலை வழக்கில் பீகாரை சேர்ந்த அண்ணன்தம்பிகைதுசெய்யப்பட்டனர்.

Update: 2021-08-28 19:12 GMT
மணப்பாறை, ஆக.29-
மணப்பாறை அருகே தொழிலாளி கொலை வழக்கில் பீகாரை சேர்ந்த அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.
தாக்குதல்
திருச்சி மின்வாரிய சாலை டவுன் ஸ்டேசன் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). இவரது சகோதரர் பாபு. இருவரும் மணப்பாறை அருகே மொண்டிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இதே போல் பீகார் மாநிலம், சூபோல் மாவட்டம், குடிட்யமேகே பகுதியைச் சேர்ந்த விஜயராம் (32), அவரது சகோதரர் ராம்தேவ் (30) ஆகியோரும் அதே தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் தொழிலாளர்கள் அதே பகுதியில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
மோதல்
இந்நிலையில் கடந்த 22-ந் தேதி தங்கும் இடத்தில் விஜயராம், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இடைேய தகராறு ஏற்பட்டு கைகலப்பாகியது. அப்போது, அவர்களின் சுகோதாரர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மோதலாகியது. இதில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.  இருப்பினும் உடல்நிலை சரியாகாததால் மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணமூர்த்தி நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பாபு அளித்திருந்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கொலை வழக்காக மாற்றம்
இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்ததால் கொலை வழக்காக மாற்றி தாக்குதல் நடத்திய விஜயராம் மற்றும் அவரது சகோதரர் ராம்தேவ் ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்