போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை போலியாக போட்டவர் மீது வழக்கு
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் கையெழுத்தை போலியாக போட்டவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் பெரியசாமி. இவரது கையெழுத்து மற்றும் போலீஸ் நிலைய முத்திரையை இலுப்பூரை சேர்ந்த ராமமூர்த்தி போலியாக பயன்படுத்தி பத்திரம் காணாமல் போனது தொடர்பாக சான்றிதழ் தயாரித்துள்ளார். இது தொடர்பாக திருக்கோகர்ணம் போலீசார், ராமமூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.