பஸ்சில் முதியவரிடம் ரூ.4½ லட்சம் திருட்டு

பஸ்சில் முதியவரிடம் ரூ.4½ லட்சம் திருடி சென்றனர்.;

Update: 2021-08-28 18:38 GMT
புதுக்கோட்டை:
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது77). இவர் ஒரு நிலத்தை விற்ற பணமான ரூ.4 லட்சத்து 55 ஆயிரத்தை ஒரு கைப்பையில் வைத்துக்கொண்டு புதுக்கோட்டையில் இருந்து திருச்சிக்கு பஸ்சில் ஏறினார். பஸ்சில் ஏறும் போது பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இந்த நிலையில் தனது கைப்பையை பார்த்த போது அதில் இருந்த ரூ.4 லட்சத்து 55 ஆயிரம் திருடுபோகியிருந்தது. இது குறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் சுப்பையா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்