ரேஷன் கடை ஊழியரை தாக்கி நகை, பணம் பறிப்பு

ரேஷன் கடை ஊழியரை தாக்கி நகை, பணம் பறிப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2021-08-28 17:03 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள வழுதூர் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னையா மகன் தினகரன் (வயது55). தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில துணை தலைவராக உள்ளார். இவர் ராம நாதபுரம் அருகே உள்ள நாரையூரணி ரேஷன் கடையில் பணி முடித்துவிட்டுவாலாந்தரவை ரெயில்நிலையம் அருகில் சென்றபோது 3 பேர் வழிமறித்து தாக்கி 2 பவுன் தங்க சங்கிலி ரூ.3 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு சென்று விட்டார்களாம். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைப்பாண்டி உள்ளிட்டோரை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்