மதுரை செல்லூர் பந்தல்குடி 4-வது தெருவை சேர்ந்தவர் முத்துக்கருப்பி (வயது 60). இவருடைய மகன் கருப்பசாமி (30), மனநிலை பாதிக்கப்பட்டவர். இவர் அடிக்கடி தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் அருகில் இருந்த கட்டையை எடுத்து தாயாரின் தலையில் தாக்கினார். அப்போது அந்த கட்டையில் இருந்த ஆணி முத்துக்கருப்பி தலையில் பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.