அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும்

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என வளர்ச்சி கண்காணிப்புக்குழு தலைவரும், எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கூறினார்.

Update: 2021-08-28 16:40 GMT
திருவாரூர்:
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும் என வளர்ச்சி கண்காணிப்புக்குழு தலைவரும்,  எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் கூறினார்.
கண்காணிப்புக்குழு கூட்டம் 
திருவாரூர் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு வளர்ச்சி கண்காணிப்புக்குழு தலைவரும், தஞ்சை எம்.பி.யுமான எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமை தாங்கினார். கண்காணிப்புக்குழு இணைத்தலைவரும், நாகை எம்.பி.யுமான செல்வராஜ், கண்காணிப்புக்குழு செயலாளரும், மாவட்ட கலெக்டருமான காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. பேசினார். 
அப்போது அவர் கூறியதாவது:-
முழு முனைப்புடன் செயல்பட வேண்டும்
பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் தொடர்பான தகவல்களை மனுதாரருக்கு உடனுக்குடன் வழங்க வேண்டும். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அலுவலர்கள் முழு முனைப்புடன் செயல்பட வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு அதிக கடனுதவிகளை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை  மேம்படுத்திட வேண்டும். மேலும் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகளை விரைவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் தெய்வநாயகி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்