யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
யோகாசன போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்ட யோகா அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி இணையதளம் மூலம் நடைபெற்றது. போட்டியில் 150-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், மாநில அளவிலான யோகாசன போட்டிக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியும் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு யோகாசன அசோசியேஷன் தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துகுமாரசாமி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் முருகேஷ் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களில் முதல் 6 பேர், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.