செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 126 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 126 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 976 -ஆக உயர்ந்துள்ளது.

Update: 2021-08-28 14:37 GMT
இவர்களில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 406 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2429 -ஆக உயர்ந்துள்ளது. 1141 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்