கூடுவாஞ்சேரியில் கார் மோதி தொழிலாளி பலி

சென்னை மண்ணடி அரண்மனைக்காரன் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 56). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Update: 2021-08-28 14:19 GMT
பின்னர் மீண்டும் சென்னை செல்வதற்காக திருமண மண்டபத்தில் இருந்து ஜி.எஸ்.டி. சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த கார் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமதாஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராமதாஸ் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்