கார் மோதி பஞ்சர் கடைக்காரர் சாவு

கார் மோதி பஞ்சர் கடைக்காரர் சாவு

Update: 2021-08-28 12:48 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில், கே.பி.சி நகர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமிவயது 61. வெள்ளகோவில், பழைய பஸ் நிலையம் அருகே கோவை- திருச்சி மெயின் ரோட்டில் பஞ்சர் கடை நடத்தி வந்தார். இவர் நேற்றுகாலை தனது கடைக்கு முன்பு நடந்து சென்றபோது கோவையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் சின்னசாமி மீது மோதியது. இதில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே சின்னசாமி இறந்துவிட்டார், இதுகுறித்து காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த திருமூர்த்தி 55  மீது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர்  விஜயலட்சுமி, சப்இன்ஸ்பெக்டர் மாலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சின்னசாமியின் உடல் பிரேத  பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
==============

மேலும் செய்திகள்