திருவள்ளூர் அருகே தம்பதிக்கு அடி- உதை; சகோதரர்கள் கைது
திருவள்ளூரை அடுத்த பெரியகுப்பம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ரேகா (வயது 31). நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர்.;
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த இளையராஜா (43), அவரது சகோதரர் ரமேஷ் (45) ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன் விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு கணவன், மனைவியை தகாத வார்த்தையால் பேசி இருவரையும் கையாலும், உருட்டுக்கட்டையாலும் தாக்கினார்கள். இதில் பலத்த காயமடைந்த ரேகா திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் இளையராஜா, ரமேஷ் ஆகியோரை கைது செய்தனர்.