பொதுமக்களை தங்கவைக்க பள்ளிகள் தயார்

திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களை தங்கவைக்க பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-08-28 10:31 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களை தங்கவைக்க பள்ளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
ரெட் அலர்ட் 
தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உள்ளிட்ட குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நேற்று முதல் நாளை திங்கட்கிழமை வரை 3 நாட்கள் மிக அதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரெட் அலர்டும் விடுக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இந்த நாட்களில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உள்பட கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
பள்ளிகள் தயார் 
அதன்படி கனமழை பெய்யும் பட்சத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். அதுபோல் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ள நீர்புகும் அபாயமும் உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை மீட்டு பாதுப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதற்காக தாலுகா வாரியாக பள்ளிகள், கல்லூரிகள், கல்யாண மண்டபங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகரில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நஞ்சப்பா ஆண்கள் பள்ளி, ராயபுரம் மாநகராட்சி பள்ளி ஆகிய பள்ளிகள் சுத்தம் செய்து தயாராக வைக்கப்பட்டுள்ளன.


மேலும் செய்திகள்