சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக 2 ஆதார் நிரந்தர பதிவு மையங்கள்-கலெக்டர் கார்மேகம் திறந்து வைத்தார்
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கூடுதலாக 2 ஆதார் நிரந்தர பதிவு மையங்களை கலெக்டர் கார்மேகம் திறந்து வைத்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் எல்காட் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதார் நிரந்தர பதிவு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக 2 ஆதார் நிரந்தர பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களை நேற்று கலெக்டர் கார்மேகம் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த ஆதார் நிரந்தர பதிவு மையங்களில் புதிய ஆதார் பதிவுகள், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பிறந்த தேதி திருத்தம், பாலினம் திருத்தம், கைப்பேசி எண் திருத்தம், புகைப்படம் மாற்றம் உள்ளிட்ட அனைத்து பதிவுகள் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் எல்காட் கிளை மேலாளர் லோகநாதன், துணை மேலாளர் (அரசு கேபிள் டி.வி.) பிரகாஷ், சேலம் தாசில்தார் செம்மலை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், எல்காட் பொறியாளர் சின்னையன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.