மாற்றுத்திறனாளிகள் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி குமரியில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகர்கோவில்:
மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி தொகையை உயர்த்தி வழங்க கோரி குமரியில் 15 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
உதவித் தொகை
மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் வழங்குவது போல், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரமும், தீவிர பாதிப்புடைய மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் உதவித்தொகை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் துணைத் தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் மனோகர ஜஸ்டஸ் தொடங்கி வைத்து பேசினார்.
கோஷம் எழுப்பினர்
இதில் மாவட்ட இணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்பட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல் ராஜாக்கமங்கலம், மருங்கூர், ஆற்றூர், பள்ளம், களியக்காவிளை உள்பட மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் மாற்றுத்திறனாளிகளின் ஆர்ப்பாட்டம் நடந்தது.