டெம்போ மோதி பெயிண்டர் பலி

இரணியல் அருகே டெம்போ மோதி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2021-08-27 20:56 GMT
திங்கள்சந்தை:
இரணியல் அருகே டெம்போ மோதி பெயிண்டர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து டெம்போ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
பெயிண்டர்
தக்கலை அருகே குமாரபுரம் முட்டைக்காடு பகுதியை சேர்ந்த ராபின் மகன் அனிஷ் (வயது 22), பெயிண்டர். இவர் நேற்று முன்தினம் தனது நண்பர் பிரடின் கார்டுவை பார்க்க வில்லுக்குறிக்கு சென்றார். அங்கு நண்பர்கள் இருவரும் பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு புறப்பட்டனர்.
பொருட்களை வாங்கிய பின்பு 2 பேரும் சாலையை கடக்க முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ அனிஷ் மீது பயங்கரமாக மோதியது.
சாவு
இதில் அனிஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். தனது கண்முன்பு நண்பர் வாகனத்தில் அடிப்பட்டு கிடப்பதை பார்த்து பிரடின் கார்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிஷ் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டெம்போ டிரைவர் விஜய் ஆத்மா (38) என்பவரை கைது செய்தனர். டெம்போ மோதி பெயிண்டர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்