மக்கள் நாடாளுமன்ற நிகழ்ச்சி
சிவகிரியில் மக்கள் நாடாளுமன்ற நிகழச்சி நடந்தது.
சிவகிரி:
சிவகிரி அருகே ராயகிரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஒன்றிய அரசின் விவசாய விரோத மூன்று சட்டங்களை திரும்ப பெறும் தீர்மானத்தை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்கும் மக்கள் நாடாளுமன்றம் நிகழ்ச்சி ராயகிரி பஸ் நிலையம் அருகில் நேற்று நடைபெற்றது இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் சங்கரையா தேசிய கொடியேற்றி வைத்தார். தேசிய கீதம் பாடப்பட்டது.
மாவட்ட குழு உறுப்பினர் சமுத்திரக்கனி முன்னுரையுடன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார், விவசாய துறை அமைச்சராக சுப்பையா, இணை அமைச்சராக சமுத்திரம் ஆகியோர் தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். தி.மு.க. நகர செயலாளர் கே.டி.சி.குருசாமி சபாநாயகராக விவசாய சட்டங்களை திரும்ப பெறும் தீர்மானத்தை விவாதத்திற்கு பின் ஒருமனதாக அவையில் நிறைவேற்றிவைத்தார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை வாழ்த்துரை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்களாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ரவி, செல்வி, காந்தம்மாள், குருசாமி, சீனிவாசன், ஜெயகணேசன், தி.மு.க.வை சேர்ந்த ராஜகுரு, காங்கிரஸ் பேச்சியப்பன், முனியாண்டி, ம.தி.மு.க. சங்கரநாராயணன் ஆகியோர் விவாதத்தில் பங்கெடுத்தனர்.