தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லையில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
நெல்லை:
நெல்லை சிவந்திபட்டி அருகே உள்ள கொடிகுளத்தை சேர்ந்தவர் சுடலையாண்டி (வயது 52). தொழிலாளி. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். எனவே இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். இதில் மனமுடைந்து காணப்பட்ட சுடலையாண்டி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.