நெல்லைக்கு வருகை தந்த மராட்டிய பெண் மந்திரிக்கு வரவேற்பு
நெல்லைக்கு வருகை தந்த மராட்டிய பெண் மந்திரிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
நெல்லை:
மராட்டிய மாநில கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தார். அவருக்கு மாவட்ட எல்கையான கங்கைகொண்டானில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கபட்டது.
இதைத்தொடர்ந்து அவர் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு இருக்கும் காமராஜர், இந்திரா காந்தி ஆகியோர் சிலைகளுக்கும், வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் இருக்கும் முன்னாள் சபாநாயகர் செல்லப்பாண்டியன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.