12 பவுன் நகைகள் திருட்டு

வீட்டுக்கதவை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு;

Update: 2021-08-27 18:15 GMT
காரைக்குடி
கோட்டையூர் காட்டூரணி அக்ரஹாரம் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 70). இவர் தனது மனைவியோடு சென்னையில் உள்ள தனது மகளை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுந்தரம் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 12 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து சுந்தரம் பள்ளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மேலும் செய்திகள்