கரிசல்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்

கரிசல்பட்டியில் புதிய டிரான்ஸ்பார்மர்

Update: 2021-08-27 18:15 GMT
எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே கரிசல்பட்டி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த மின் அழுத்த குறைபாட்டால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதைதொடர்ந்து கரிசல்பட்டி கிராமத்திற்கு ரூ.5¾ லட்சம் மதிப்பில் புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவுக்கு ஊராட்சி தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை புதிய டிரான்ஸ்பார்மரை தொடங்கி வைத்தார். அவர் புதிய டிரான்ஸ்பார்மர் மூலமாக தற்போது 120 வீடுகளுக்கு கூடுதலாக மின்சாரம் வழங்க முடியும் என்றார். இதன் மூலம் தற்போது சீரான மின்சாரம் வினியோகப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் உதவி மின் பொறியாளர்கள் பார்த்திபன், முத்துக்குமார், ஊராட்சி செயலர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்