கூடலூர் எல்லையில் போலீசார் வாகன சோதனை

கர்நாடகாவில் இருந்து போதைபொருட்கள் கடத்தப்படுகிறதா? என கூடலூர் எல்லையில் போலீசார் வாகன சோதனை செய்தனர்.

Update: 2021-08-27 16:25 GMT
கூடலூர்

கர்நாடகாவில் இருந்து போதைபொருட்கள் கடத்தப்படுகிறதா?  என கூடலூர் எல்லையில் போலீசார் வாகன சோதனை செய்தனர். 

போலீசாருக்கு தகவல் 

தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் கூடலூர் பகுதியில் இணைகிறது. கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்கள் சரக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. 

இந்த நிலையில் கர்நாடகாவில் இருந்து இரு சக்கர வாகனங் களில் போதை பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் மசினகுடி போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். 

தீவிர சோதனை 

அவர்கள் கர்நாடகாவில் இருந்து வரும் அனைத்து இருசக்கர வாகனங்களையும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும் சந்தேகப்படும் படியான இருசக்கர வாகன ஓட்டிகளை பிடித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது தடை செய்யப்பட்ட, போதை பொருட்களை கடத்தி வந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்

 என்றனர்.

மேலும் செய்திகள்