7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை காவலர்-பணியாளர்கள் மனு
7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூ7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை காவலர்கள், பணியாளர்கள் மனு கொடுத்தனர். ய்மை காவலர்கள், பணியாளர்கள் மனு கொடுத்தனர்.;
திண்டுக்கல்:
தமிழ்நாடு கிராம ஊராட்சி குடிநீர் மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கத்தினர், நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், குடிநீர் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.1,400 சம்பளம் கூடுதலாக வழங்கும் அரசாணையில் முரண்பாடுகள் உள்ளன. எனவே முரண்பாடுகளை களைந்து ஊதியத்துடன் கூடுதலாக ரூ.1,400 வழங்க உத்தரவிட வேண்டும். மேலும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அதேபோல் தூய்மை பணியாளர்களை போன்று சிறப்பு காலமுறை ஊதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத சம்பளமாக ரூ.7 ஆயிரத்து 100 வழங்க வேண்டும். கொரோனா கால ஊக்கத்தொகையாக தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.